கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் - பெருவாயல் டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.;

Update: 2025-12-19 09:18 GMT
கும்மிடிப்பூண்டி - பெருவாயல் டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயல் டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம் கணக்கியல் மற்றும் நிதிதுறை சார்பில், "கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தன்மைப் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கைவளர்ப்பு” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்குசிறப்பாக நடைபெற்றது. இந்தகருத்தரங்கில் கிளவுட்ஒன் மற்றும் ஆத்யுனல் நிறுவனங்களின் மனிதவளம் மற்றும் செயல்பாடுகள் இயக்குநர் பி.சதீஷ்குமார் வளப்பயிற்சியாளராக பங்கேற்று மாணவர்களின் வெற்றியடைய தேவையான மற்றும் தொழில்முறை திறன்கள் குறித்து விரிவாக கல்விமற்றும்தொழில்துறையில் தன்மைப்பயிற்சி,தன்னம்பிக்கை உரையாற்றினார். இந்தநிகழ்ச்சிக்கு டி.ஜெ.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.லக்ஷ்மிபதி தலைமை உரையாற்றி, முழுமையான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.முன்னதாக அனைவரையும் பி.காம் கணக்கியல் மற்றும் நிதிதுறை தலைவர் லெப்ட்.டாக்டர் புவனேஷ்வரி வரவேற்றுப் பேசினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.இந்த கருத்தரங்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது என மாணவர்கள் கூறினர். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)

Similar News