திண்டுக்கல்லில் காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலர்களின் உடைமைகளை ஆய்வு செய்த புறநகர் டிஎஸ்பி

Dindigul;

Update: 2025-12-20 03:47 GMT
திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் புறநகர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தாலுகா, தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்பாத்துரை, சாணார்பட்டி, நத்தம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலர்களின் உடைமைகளை (Kit Inspection) புறநகர் டிஎஸ்பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை புறநகர் டிஎஸ்பி.சங்கர் ஏற்றுக்கொண்டு கவாத்து பயிற்சி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் காவலர்களின் உடமைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்குணசேகரன், தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்

Similar News