மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்-சிறப்பு மருத்துவ முகாமில்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் சிறப்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டார்;
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இன்று (20.12.2025) ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்-சிறப்பு மருத்துவ முகாமில் முகமது சயூப் (வயது 12), த/பெ. அசாருதீன் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மனு வழங்கிய உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.18,000/மதிப்பீட்டிலான சக்கர நாற்காலியை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரமன்ற தலைவர் திருமதி.தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில் குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.வசந்த ராமகுமார் மற்றும் பலர் உள்ளனர்.