மின் சிக்கன வார விழா பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி

மின் சிக்கன வார விழாவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்;

Update: 2025-12-20 16:30 GMT
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின் சிக்கன வார விழா நிறைவு நாளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், மின் சிக்கன வார விழா நிறைவு நாளினை முன்னிட்டு பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (20.12.2025) பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியங்களில் மின்சாரம் முக்கியமானதாகும். மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 15.12.2025 முதல் 20.12.2025 வரை மின் சிக்கன வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளில் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் போது தேவையில்லாமல், யாருக்கும் பயனற்ற முறையில் மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்தி மின்சாரத்தையும் மின்சார கட்டணத்தையும் குறைத்து, தங்களுடைய பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஏற்கனவே, 15.12.2025 அன்று பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை அலுவலகத்தில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். மின் சிக்கன வார விழா கடைசி நாளான இன்று (20.12.2025) மின் சிக்கனத்தை பொதுமக்கள் எவ்வாறு கடைப்பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற பேரணியில், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள்,பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மின்சார சிக்கனம் தேவை இக்கணம், மின்சாரத்தை சேமிப்பீர் நாட்டிற்கு உதவுவீர், திறன்மிகு மின்சார கருவிகளை பயன்படுத்துவீர், மின்சாரம் நாட்டின் ஆதாரம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு, விளக்கேற்றும் நேரத்தில் பம்புசெட்டை இயக்காமல் இருந்தால் தவிர்க்கலாமே மின் தடையை, குழந்தைகளின் படிப்புக்கு கிடைக்குமே தடையில்லா மின்சாரம், சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமியுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணியனது புதிய பேருந்து நிலையம், 4 ரோடு வழியாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சென்றடைந்தது. முன்னதாக பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இப்பேரணியில், தமிழ்நாடு மின் வாரியம் / தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் பொறி.வீ.மேகலா., பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர்கள் பரமேஸ்வரி, அசோக்குமார்,அய்யனார் மற்றும் மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News