இயேசு கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு காரல்ஸ் ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் விழாவில் கலந்துகொண்டு கேக்குகள் வெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்;
பெரம்பலூரில் இயேசு கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு காரல்ஸ் ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் தினத்திற்கு சில தினங்கள் முன்பு கிறிஸ்தவ மக்களால் இயேசு கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு காரல்ஸ் நடத்தப்படுவது வழக்கம். இது இயேசு கிறிஸ்து பிறக்கப் போகிறார் என்ற முன்னறிவிப்பை உலகத்திற்கு சொல்லும் விதமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். அந்த வகையில் பெரம்பலூர் புனித பனிமயமாதா ஆலயத்தில் இன்று கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பு காரல்ஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதனை ஆலய பங்கு தந்தை சுவக்கின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா வேடமடைந்தும் கிறிஸ்மஸ் தொப்பி அணிதும் ஊர்வலமாக சென்றனர். புனித பனிமயமாதா ஆலயத்தில் துவங்கிய இந்த ஊர்வலம் i கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு மற்றும் சங்குப்பேட்டை வழியாக மீண்டும் பேராலயத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் தாத்தா வேதமடைந்தவர்கள் சாலையில் செல்வோர்களுக்கும் கடைகளில் இருப்பவர்களுக்கும் இனிப்பு கொடுத்து கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்பை வெளிப்படுத்தினர்.