மறைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இல்லத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!!
நாகப்பட்டினம் அருகே மறைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இல்லத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவரது திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.;
By : King 24x7 Desk
Update: 2025-12-20 19:16 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த சின்னதும்பூர் ஊராட்சி ஆலமழை கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரண்யா கணவரும், நாகை மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி உயிரிழந்தார். இதை அறிந்த மறைந்த கு.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.