திண்டுக்கல் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி
திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ்;
திண்டுக்கல், சீலப்பாடி, பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வனராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த வாலிபர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றிய நபர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது