கரூர் அருகே செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளியில் டிசம்பர் மாத விழாவில் மாணாக்கர்கள் பரவசம்.
கரூர் அருகே செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளியில் டிசம்பர் மாத விழாவில் மாணாக்கர்கள் பரவசம்.;
கரூர் அருகே செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளியில் டிசம்பர் மாத விழாவில் மாணாக்கர்கள் பரவசம். கரூர் அடுத்த புலியூரில் செயல்படும் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளியில் டிசம்பர் 20,21 ஆகிய இரண்டு நாட்கள் டிசம்பர் திருவிழா மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த விழாவை பள்ளி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் துணை முதல்வர் பத்மபிரியா ஆகிய தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் வணிக அமைப்புகள் கைகோர்த்து சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு அரங்குகளை அமைத்தனர். மாணவர்கள் விளையாட்டு அரங்குகளையும் உணவு அரங்குகளையும் அமைத்தனர். மாணவர்கள் அமைத்த அரங்குகளில் பெற்றோர்களும் பொதுமக்களும் பல்வேறு பள்ளியிலிருந்து வந்த மாணவ மாணவியர்களும் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து உணவுகளை சுவைத்தும் பரவசமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் நகரத்தின் பல்வேறு வணிக அமைப்புகளின் வணிகப் பொருட்கள் அரங்குகள் விற்பனைக்கு இருந்தது. பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அந்த விற்பனை நிறுவனத்தில் பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் பள்ளி விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய பன் விளையாட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சி கரூர் நகரத்தின் உணர்வை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட விழாவாக டிசம்பர் திருவிழா அமைந்தது. மேலும் மாணாக்கர்களிடம் உன்னதமான சேவை உணர்வை வளர்த்தெடுக்கும் விழாவாகவும் மற்றும் மாணவர்களிடம் சமூக ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் விழாவாகவும் டிசம்பர் திருவிழா அமைந்தது.