ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மக்களவை கூட்டத் தொடரில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குகின்ற சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மக்களவை கூட்டத் தொடரில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குகின்ற சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் எஸ்.எம்.வீரப்பா தலைமை தாங்கினார். நகர தலைவர் எஸ்.பியாரேஜான் முன்னிலை விகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமத், திமிரி வட்டாரத் தலைவர்கள் காவனூர் சீனிவாசன், லீலா கிருஷ்ணன், வாலாஜா வட்டாரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ பி சி மாவட்ட பொதுச்செயலாளர் பரத், ஓ பி சி துறை மாவட்ட தலைவர் மொய்தீன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார், சிறுபான்மை துறை நகரத் தலைவர் முஜிபா, மனித உரிமை மாவட்ட தலைவர் புவனேஸ்வரன், கொடைக்கல் சிவா, டி சி டி யு சதீஷ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.