உதயநிதி பிறந்தநாள் விழா கோளகாலமாக கொண்டாடிய ஒன்றிய செயலாளர்
குன்றார்டார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் குளாவாய்ப்பட்டி சண்முகம் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது;
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் குன்றாண்டார்கோவில் மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர் C.சண்முகம் ஏற்பாட்டில் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயாஸ்டாலின்அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மோசக்குடி சாலையில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மாண்புமிகு கனிம வளத்துறை அமைச்சர் S.ரகுபதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.250000 பரிசாக வழங்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளருமான மு.மணவழகன், கழக விவசாய தொழிலாளரணி துணை செயலாளரும் குன்றாண்டார்கோவில் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான KRN.போஸ், குன்றாண்டார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் N.சேட்டு, மேற்கு ஒன்றிய செயலாளர் OS.வெங்கடாசலம், விராலிமலை மத்திய ஒன்றிய செயலாளர் KP.அய்யப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் T.செல்வம், கை.பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும் திருவிடைமருத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் செ.குறிஞ்சிவாணன், கீரனூர் பேரூர் செயலாளர் P.அண்ணாதுரை, கீரனூர் பேரூராட்சி தலைவர் KMK.ரவிக்குமார் துணை தலைவர் MAM.இம்தியாஸ் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆயரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று பந்தயத்தை கண்டு களித்தனர்.