தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஏழாவது மாநிலத் தேர்தல் மற்றும் முப்பெரும் விழா ஆற்காடு ஜன சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஏழாவது மாநிலத் தேர்தல் மற்றும் முப்பெரும் விழா ஆற்காடு ஜன சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வுக்கு மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன் தலைமை தாங்கினார் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில தேர்தலில் த. ராமஜெயம் மாநில தலைவராகவும், வெ. சரவணன், மாநில பொதுச் செயலாளராகவும்.;

Update: 2025-12-21 11:40 GMT
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஏழாவது மாநிலத் தேர்தல் மற்றும் முப்பெரும் விழா ஆற்காடு ஜன சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வுக்கு மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன் தலைமை தாங்கினார் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநில தேர்தலில் த. ராமஜெயம் மாநில தலைவராகவும், வெ. சரவணன், மாநில பொதுச் செயலாளராகவும் .பூ. ஜெகன் மாநில பொருளாளராகவும், மு செல்லத்தாயி, மாநில அமைப்பு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 11மாநில நிர்வாகிகள் 3 மாநில மகளீர் அணி ஒருங்கிணைப்பாளர்கள், 7 மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் அலுவலர்களர்களாக மாநில செயலாளர் பழ. சீனிவாசன், மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் க.ரமேஷ் அவர்கள் செயல்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மு. செல்லத்தாயி ச. விஜயலட்சுமி சி.கனகசபை ஆகியோர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பழ.சீனிவாசன் அவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வைத்தியநாதன், வேலூர் மாவட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், தலைவர் சங்கர் ,கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திருமால், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நீல நாராயணன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்களுக்கு நினைவு பரிசினை ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் வழங்கி சிறப்பித்தார் . முடிவில் ராணிப்பேட்டை மாவட்டத் துணை செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.

Similar News