கரூரில் தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு.
கரூரில் தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு.;
கரூரில் தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு. கரூரை அடுத்த புலியூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் தமிழர் தேசம் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைவர் கே கே செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க கடவூர் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் சிங்கை பாரதி முத்துராஜா, கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தக் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளராக யுவராஜ்,மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் அருண்குமார், உதயமூர்த்தி, நகர செயலாளர் ரகுராஜன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டத்தில் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் செல்வகுமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.