கிருஷ்ணராயபுரத்தில்மோட்ச தீபம் ஏற்ற என்ற இந்து முன்னணியினர் கைது.
கிருஷ்ணராயபுரத்தில்மோட்ச தீபம் ஏற்ற என்ற இந்து முன்னணியினர் கைது.;
கிருஷ்ணராயபுரத்தில்மோட்ச தீபம் ஏற்ற என்ற இந்து முன்னணியினர் கைது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்த பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்ததை கண்டித்து பூர் பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த அவரது ஆன்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்ற வந்தனர். இதற்கு காவல்துறையில் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி மோட்ச தீபம் ஏற்ற வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். . அப்போது ஹிந்து முன்னணியினர் தமிழக அரசுக்கு எதிராகவும் திருப்பரங்குன்றத்தை காப்போம் எனவும் கோஷங்களை எழுப்பினர்.