வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம். ஆரணி அதிமுக எம்எல்ஏ ஆய்வு.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன்.;
ஆரணி சட்டமன்ற தொகுதியில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றதில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி நகரம் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றதில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதேபோல் ஆரணி சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்றதில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது உடன் ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், நகர நிர்வாகி முனியன், முன்னாள் அதிமுக நகர மன்ற உறுப்பினர் ஏ.கே.பிரபு ஆகியோர் இருந்தனர்.