தென்காசி மாவட்டத்தில் இன்று

தென்காசி மாவட்டத்தில் இன்று;

Update: 2025-12-21 18:05 GMT
டிசம்பர் 21, தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டத்தில் இன்று ஐந்து தேர்வு மையங்களில் காவல் பணியாளர் தேர்வு நடைபெற்றது. 2. வாசுதேவநல்லூர் பூங்காவை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது. 3. கீழப்பாவூர் பகுதியில் இன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. 4. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வருகை தந்ததை உறுப்பினர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகள் மற்றும் கனிம வள கொள்ளை பினாமி பெயரில் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். 5. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றது. 6. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ததை கண்டிக்க முடியும் தென்காசி திமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News