திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கினார்
*ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்....*;
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற முப்பதும் தப்பாமே எனப்படும் திருப்பாவை முற்றொருதல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். 108 திவ்ய தேசங்களில் பிரதானமாக விளங்கக்கூடியதாகவும் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஊராக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்கும் வைவமான திருப்பாவை விழா பல்வேறு தரப்பினர் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம்.அதன் அடிப்படையில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் இன்று 7 ஆம் ஆண்டு திருப்பாவை முற்றோருதல் விழாவான முப்பதும் தப்பாமே நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு அமைந்துள்ள திருவடிப்பூர கொட்டகையில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆழ்வார் திருநகரி ரங்க ராமானுஜ ஜீயர் மற்றும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் மற்றும் வைணவ, சைவ துறவியர்களின் தலைமையில் ஆரம்பமான சீர்வரிசை ஊர்வலமானது நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலை அடைந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு சமர்ப்பிப்பதற்காக ஆப்பிள், மாதுளை, வாழைப்பழங்கள் மற்றும் முந்திரி உள்ளிட்ட பொருட்களை தட்டுகளில் வைத்து தலையில் மீது வைத்துக் கொண்டு ஊர்வலமாக சுற்றி வந்தனர். ஊர்வலத்தில் நிறைவில் வரிசையாக கோவிலுக்கு சென்ற பெண்கள் கர்ப்பகிரகத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு தங்களின் சீர்வரிசை பொருள்களை வழங்கி ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் கோதை நாச்சியார் தொண்டர்குழாம் சார்பில் பிரசாத பைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக திருவாடிப்பூரா கொட்டகையில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் அனைவரும் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ அரங்க நாட்டிய நாடகம் நடைபெற்றது.