கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்;
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சங்கரப்பநாயக்கன் பட்டியில் சாக்கடை தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூவானி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரப்பநாயக்கன்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி யில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளிலும் வீடுகளுக்கு அருகிலேயும் தேங்கி யுள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பூவானி ஊராட்சி சங்கரப்பநாயக்கன்பட்டியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் தூர்வாரப் படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி யின்றி வீட்டு வாசலில் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் எழுந்து சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பேவர் பிளாக் சாலை அமைத்ததால் கழிவுநீர் கால் வாய் உயரம் குறைந்து, குப்பை, மண் நிரம்பி அடைத்து விட்டது. மேலும் வீட்டு வாசலில் உள்ள குடிநீர் குழாயைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்கி உள்ள தால் நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் கழிவுநீர் கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.