நாகை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருட்களைக் கொண்டு புதுமையான முறையில் கிறிஸ்மஸ் மரம்; பள்ளி மாணவர்கள் அசத்தல்!!

நாகை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருட்களைக் கொண்டு புதுமையான முறையில் கிறிஸ்மஸ் மரம் செய்து பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.;

Update: 2025-12-22 04:06 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரத்தில் உள்ள உதவும் நண்பர்கள் தொண்டு நிறுவனம் சார்பில் தூய செபஸ்தியார் ஆலயத்தில் பயற்ற பிளாஸ்டிக் கழிவு பொருட்களைக் கொண்டு புதுமையான முறையில் இக்கிராமத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறனை மேம்படுத்தவும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் வண்ண அழகிய கிறிஸ்மஸ் மரம் செய்து கைவினைப் பொருள்களாக மாற்றி அசத்திய பள்ளி மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர் அவர்களுக்கு பரிசாக அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது.

Similar News