தர்மபுரி அருகே வயதான தம்பதியரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த

சமூக நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர்.;

Update: 2025-12-22 07:12 GMT
தர்மபுரி
தர்மபுரி அருகே வழிப்பாதை அடைந்ததால் வயதான தம்பதியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத அவல நிலை. பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோழி மேக்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் மெஹபூப் (85) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இவரது மனைவி நஜ்மா பிபி (80) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி பெண் பிள்ளைகள் வெளியூர் மற்றும் வழி மாநிலங்களும் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோழி மேக்கனூர் கிராமத்தில் ஆற்றங்கரை ஓரம் வயதான தம்பதியினர் தனியாக சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வர வேண்டும் என்றால் இரண்டு ஆற்றங்கரையை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இவர்களது மகன் சானவாஸ் மகள் ஷர்மிலி ஆகியோர் அக்பர் என்பவரிடம் கடந்தாண்டு வழிப்பாதைக்காக 94 சென்ட் நிலத்தை 25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். அந்த வழிப்பாதை நிலத்தில் பாதுகாப்பிற்காக கேட் அமைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை விற்ற அக்பர் மீண்டும் பணம் கேட்டு தனியாக வசித்து வரும் வயதான தம்பதியர்கள் வெளியே வராத படி கேட்டை பூட்டி உள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்த சமூக நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முதியவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Similar News