கடவூர் கன்னிமார்பாளையத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்;
கரூர் மாவட்டம்,கடவூர் மேற்கு ஒன்றியம்,வாழ்வார்மங்கலம் ஊராட்சி பூத் 213 கன்னிமார்பாளையத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தேர்தல் பிரச்சார முன்னெடுப்பிற்கான ஆலோசனைக் கூட்டமானது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையிலும் கடவூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செல்வராஜ்,தலைமை செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி பலப்படுத்தும் நோக்கில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சார முன்னெடுப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவுரைகளை வழங்கினர்.இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள்,மண்டல பொறுப்பாளர்,பாக முகவர்கள்,பூத் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள்,சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,கழக உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்