கிருஷ்ணராயபுரம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலை

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி;

Update: 2025-12-22 10:22 GMT
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டி ஓலைக்காரன் தெருவில் இருந்து புதுப்பட்டி சாலை இணைக்கும் மண்சாலை ஒன்று உள்ளது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்கள், விவசாயிகள் சென்று வந்தனர். இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டுமென சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2019-25 பதவியில் இருந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க பணிகளை மேற்கொண்டு பெரும் ஜல்லிகற்களை கொண்டு சாலை அமைத்த்து ** ஆனால் மேற்கொண்டு அதில் தார் சாலை அமைக்கவில்லை. தற்போது அந்த பெரும் ஜல்லிக்கட்டு அவ்வழியாக வாகனங்களில் செல்வதற்கும் ஆடு மாடுகள் மேய்க்க அழைத்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது அவர்கள் பெயரளவிற்கு தற்போது ஜல்லிக்கற்களை சேகரித்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தங்களின் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கையான புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News