திமுக நிர்வாகி நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
புதுக்கோட்டை மாநகர செயலாளர் செந்தில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் ரத்ததான முகாம் இன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது;
ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாநகராட்சி முதல் மாநகர செயலாளரும், மேனாள் நகர்மன்ற உறுப்பினரும், ஆற்றல் மிக்க கழப் போராளியுமான தெய்வத்திரு.ஆ.செந்தில் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்தான முகாமில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி.திலகவதி செந்தில் இரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா வழங்கினார் நிகழ்வில் புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுக்கோட்டை வடக்கு மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்