ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தீவிர சோதனை பரபரப்பு;
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் மோப்பநாய் தேவசேனா உதவியுடன் தீவிர சோதனை- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் அவர்களுக்கு மெயில் மூலம் வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது தமிழக முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்களுக்கு இமெயில் மூலம் வந்த தகவலைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்ப நாய் நிபுணர்கள் மற்றும் தேவசேனா என்ற மோப்பநாய் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மற்றும் வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை திரைப்பட நடிகர் அஜித் வீடு திருவான்மியூர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈமெயில் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேவசேனா மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது -இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது, நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது