கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-12-22 13:58 GMT
கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு 9-வது மாநில மாநாட்டு அறைகூவலின் படி ஒப்பாரி முழக்க போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் செவந்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமங்களில் துக்க காரியம் நிகழ்ந்தால் எப்படி பெண்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தோல் மீது கை போட்டு ஒப்பாரி வைத்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவார்களோ,அதே போல நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளை போட்டு வட்டமிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களில் உயர்நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்க விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாதவர்களுக்கு ஊதிய மாற்றம் ரூபாய் 5,200-ல் இருந்து ரூபாய் 20,200-ம், தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும் என கேட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News