திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
Dindigul;
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திண்டுக்கல் சரக (பொறுப்பு) டிஐஜி. அபினவ்குமார் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. மேற்படி ஏலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் தேனி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 5 வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், தேனி மதுவிலக்கு டிஎஸ்பி சீராளன், பாண்டியம்மாள் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, MFSL-பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்