நாகை அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித் தர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாகை அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித் தர வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-23 07:57 GMT

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொளப்பாடு கடைத்தெரு பகுதியில் நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும் கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான கார்த்திகா பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்களை உடனடியாக கட்டித் தர வேண்டும், சேதமடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும், சிதலமடைந்த நிலையில் உள்ள காந்தியடிகள் சிலையை சீரமைக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் முறையில் பயிர் இன்சூரன்ஸ் வழங்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராவணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், கொளப்பாடு பகுதி பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், பிரபாகரன், மண்டலச் செயலாளர் அருள் கண்ணன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலீன் உள்ளிட்ட பல்ர் கலந்து கொண்டனர்.

Similar News