பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக மறியல் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக மறியல் போராட்டம். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர்;
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக மறியல் போராட்டம். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை. தொழிலாளர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் போராடி பெற்ற 44 சட்ட தொகுப்புகளை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, கார்பரேட் | கம்பெனிகளுக்கு ஆதரவாக மாற்றிய சட்ட தொகுப்பை வாபஸ் வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு தொழிலாளர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் போரடி பெற்ற 44 சட்ட தொகுப்புகளை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, கார்பரேட் | கம்பெனிகளுக்கு ஆதரவாக மாற்றிய சட்ட தொகுப்பை வாபஸ் வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.