கிருஷ்ணராயபுரத்தில் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வினா விடை தொகுப்பு வழங்கப்பட்டது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வழங்கினார்;
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான வினா விடை தொகுப்பு புத்தகத்தை மாணவர்களுக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் எம்எல்ஏ சிவகாம சுந்தரி வழங்கினார்.கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வீரராக்கியம் அரசு உயர் நிலைப்பள்ளி, சின்னம்மாநாயக்கம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி, கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளி, மாயனூர் மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளி, மேட்டு திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாவிடை தொகுப்பு புத்தகப்பை செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணராயபுரம் எம் எல்ஏ சிவகாமசுந்தரி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, பேரூர் கழகசெயலாளர்கள் சசிகுமார், மோகன்ராஜ்,பேரூராட்சி தலைவர் சோமணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் ராதிகா, இளங்கோ, நல்லேந்திரன், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.