கரூரில் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல் போராட்டம்.
கரூரில் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல் போராட்டம்.;
கரூரில் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சார்பில் மறியல் போராட்டம். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் காமராஜர் சிலை ரவுண்டானாவில் சி ஐ டி யு மாவட்டத் துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கோபி குமார், மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கரூர் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்ட சிஐடியு மாவட்ட அளவிலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது 8 மணி நேர வேலை பூமியை பறிக்கும் செயலைக் கண்டித்தும், நிரந்தர பணிகளில் காண்ட்ராக்ட் முறையை கண்டித்தும், கட்டுமான முறைசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களை கார்ப்பரேட் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கரூர் - திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.