தோகைமலை பகுதியில் வினா விடை புத்தகம் வழங்கிய குளித்தலை எம்எல்ஏ
792 மாணவ மாணவியர்களுக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் வினா விடை;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஜி.உடையாபட்டி, நாகனூர், தோகைமலை, தெலுங்கபட்டி, பாதிரிப்பட்டி, பில்லூர், கீழவெளியூர், பொம்ம நாயக்கன்பட்டி, கள்ளை , ஏ.உடையாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு 792 மாணவ மாணவிகளுக்கு வினா விடை புத்தகங்களை வழங்கினார். இதில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராமர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்