புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா
பேரிடர் இல்லா பேரின்ப ஆண்டாக 2026”அமைந்திட பிரார்த்தனை செய்து புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது ———-;
புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தார் பள்ளி தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் முன்னிலை வகித்தார். மாணவர் ஆதிமாறன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இயற்கை பேரிடர் இல்லாத இனிய ஆண்டாக அமைய சிறப்பு பிரார்த்தனையும் நாட்டில் ஒற்றுமையும் வளர்ச்சியும் நிலவ உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் 2026ம் ஆண்டிற்கான காலண்டர்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.