மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா எம்எல்ஏ பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா எம்எல்ஏ பங்கேற்பு;

Update: 2025-12-23 11:29 GMT
சங்கரன்கோவில் பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மற்றும் விடுதியில் (TDTA) கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழா நடந்தது விழாவிற்கு விடுதி நிர்வாகி பால்பாண்டி தலைமை வகித்தார் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார் சங்கரன்கோவில் நகர திமுக சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கிறிஸ்மஸ் புத்தாடை வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் சேகர தலைவர்கள் இஸ்ரேல் தனசிங், கிங்ஸ்லி ஜெபகுமார், ஞானபால், முத்துராஜ், சிமியோன், நகர் மன்றத் தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் சேர்மன் ஆதி திராவிடர் அணி யோசேப்பு ஞான ராஜ், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன், மாவட்ட பிரதிநிதி சத்ரியன் க.முத்துக்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சங்கை அப்பாஸ் திமுக, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிப்ட்சன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா ஆறுமுகம், செல்வராஜ், நகர இலக்கிய அணி அமைப்பாளர் டாக்டர். காவல் கிளி, மற்றும் வார்டு செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Similar News