அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்!!

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-12-23 14:47 GMT

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்க சிறப்பு விருந்தினராக பாஸ்டர் TV ராஜா மற்றும் அறந்தாங்கி ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் Rtn சேக் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். செலக்சன் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் மாணவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டும், ஏஞ்சல் வேடமிட்டும் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர். மேலும் இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிபிஎஸ்இ பள்ளியின் ஆசிரியைகள் செய்து இருந்தனர். முடிவில் சிபிஎஸ்இ பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சுருதி நன்றி தெரிவித்தார். 

Similar News