கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு முன்பதிவு மையங்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே துறை அறிவிப்பு.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு முன்பதிவு மையங்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே துறை அறிவிப்பு.;

Update: 2025-12-23 14:48 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு முன்பதிவு மையங்கள் பணி நேரம் மாற்றி அமைப்பு. ரயில்வே துறை அறிவிப்பு. கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு இரயில்வேயின் சேலம் கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு மையங்கள் (பிஆர்எஸ் மையங்கள்) 25.12.2025, வியாழக்கிழமையன்று, ஞாயிற்றுக்கிழமை பணி முறையைப் போலவே, காலை 08.00 மணி முதல் மதியம் 14.00 மணி வரை ஒரு ஷிப்ட் மட்டும் செயல்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Similar News