மண்மங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

மண்மங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.;

Update: 2025-12-23 15:50 GMT
மண்மங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் செயல்படும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர், முதல்வர், இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நுகர்வோர்களை பாதிக்கும் விஷயங்களை எதிர்கொள்வதற்காக மாணவியர்கள் நுகர்வோர்கள் தொடர்பான விழிப்புணர்வை பெறுவது அவசியம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு சேவை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News