கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. விவசாயிகளின் ஜீவ ஆதாரமாக உள்ளது கால்நடைகள். கால்நடைகளுக்கு பருவ கால சூழலில் நோய் தாக்கத்திற்கு ஆட்ப்படுவது வழக்கம். இதனைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் எவ்வித கட்டணமும் இன்றி 2025-டிசம்பர் 29ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் எட்டாவது சுற்று கோமாரி தடுப்பு ஊசி கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது எனவும், கால்நடைகளை வளர்ப்போரும் விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.