விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றதில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி.;

Update: 2025-12-23 17:32 GMT
ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றதில் பள்ளி தாளாளர் டாக்டர் வி.தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரோஸலின்ஞானமணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சித்தலைவர் மகாலட்சுமிகோவர்த்தனன், நகரமன்ற உறுப்பினர் அரவிந்த், மாவட்டபிரதிநிதி எம்.கே.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News