கரூர் துயரச் சம்பவம் - கரூர் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்
கரூர் துயரச் சம்பவம் - கரூர் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்;
கரூர் துயரச் சம்பவம் - கரூர் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர துணை கண்காணிப்பாளர், நகர காவல் ஆய்வாளர் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு பல தரப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர், நான்கு காவலர்கள், ஒரு ஊர்க்காவல் படை காவலர் என மொத்தம் 6 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.