மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் நூறுநாள் திட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம்.
மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் நூறுநாள் திட்டத்தை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம்.;
காந்தி பெயரை நீக்கி நூறு நாள் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு கிராமத்தில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஒனாறிய அரசையும் துணைபோகும் அதிமுக வையும் கண்டித்து நூறுநாள் திட்ட தொழிலாளர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் பைஸ்அகமது , இந்திய கம்யூனிஸ்ட் இந்திரஜித், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சக்திஆற்றலரசு, எஸ்டிபிஐ முகமது கோயா, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.