கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-12-24 09:59 GMT
கரூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக 'புஸ்யா பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா' என்று பெயர் வைத்துள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து, கரூரை அடுத்து வெண்ணமலை பகுதியில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக 125 நாட்கள் வேலை திட்டத்திற்கு புதிய பெயருடன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் துணை போன அதிமுக கட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News