தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம்-ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் பேட்டி.
தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம்-ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் பேட்டி.;
தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம்-ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் பேட்டி. கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் மலைக்கொழுந்தான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், இருபால் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் மலை கொழுந்தன், 2021 ல் திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கைகள் சொன்ன புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் கால வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றப்பட வேண்டும். பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு வருடத்திற்கு 12 நாள் சிறப்பு தற்செயல் விடுப்புகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கு ஈடாக மற்றொரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்புகள் அனைத்து வகை தேர்வுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் வினாத்தாளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் மேலும் , அவர்கள் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் முறையினை மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனவும், தவறினால் வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.