ராமநாதபுரம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-24 11:52 GMT
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் பகுதியில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது அனைத்து கிராமப்புற பொதுமக்களின் வேலை உறுதி அளிப்பு திட்டம் ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் வாழ்வாதாரம் அளிக்கும் திட்டத்தின் பெயரை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தவும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு கெடுப்பதில் உள்நோக்கத்தோடு செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் உடனடியாக பழைய பெயரை தொடர வேண்டும் அனைத்து பொது மக்களுக்கும் முழுமையான வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார் இதேபோல ராமநாதபுரம் , திருப்புல்லாணி திருவாடனை ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான திமுக கூட்டணி கட்சியினர் பதாகைகளுடன் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்

Similar News