நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்குள் புகுந்து அவையின் நடவடிக்கை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு கரூர் எம்பி ஜோதிமணிக்கு நோட்டீஸ்.

நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்குள் புகுந்து அவையின் நடவடிக்கை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு கரூர் எம்பி ஜோதிமணிக்கு நோட்டீஸ்.;

Update: 2025-12-24 14:35 GMT
நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்குள் புகுந்து அவையின் நடவடிக்கை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு கரூர் எம்பி ஜோதிமணிக்கு நோட்டீஸ். கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் ஜோதிமணி. இன்று இவரது கரூர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவையின் மையப்பகுதிக்குள் புகுந்து அவை நடவடிக்கைகளை தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தில் இருந்து இமெயில் மூலமாக அனுப்பப்பட்ட கடிதத்தை காட்டி விளக்கினார். அன்றைய தினம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் திட்டத்தின் பெயரை மாற்றி 125 நாட்களாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதாவை கிழித்து எறிந்தேன். என்னை போலவே மற்ற எம்பிக்களும் இந்த செயலில் ஈடுபட்டதால் மொத்தம் 8- பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அதனை சுட்டிக்காட்டவும் தட்டிக் கேட்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்றைய தினம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் தட்டி கேட்டு கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை கண்டு தான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் என தெரிவித்தார். மேலும் அந்த கடிதத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News