குளித்தலையில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

"ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்" தவறுதலாக முழக்கம் இட்டதால் சலசலப்பு;

Update: 2025-12-25 02:31 GMT
100 நாள் வேலை இனி இல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திமுக மற்றும் விசிக கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் சக்திவேல் "ஸ்டாலின் அரசு கண்டிக்கின்றோம்" என்று முழுக்கமிட்ட போது பதிலுக்கு மற்றவர்கள் ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம் என தவறுதலாக முழக்கமிட்டதால் அருகில் நின்று கொண்டிருந்த திமுக ஒன்றிய செயலாளர் உடனடியாக அவரிடம் மைக்கை பிடுங்கி கண்டன கோஷங்களை எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Similar News