சாணார்பட்டி அருகே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி;
திண்டுக்கல், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு(38), இவரது மனைவி ஈஸ்வரி(35) இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக பிரபுவிற்கும் - ஈஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் ஆத்திரமடைந்த பிரபு மனைவி ஈஸ்வரியை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்