தேனி மாவட்ட குரும்பர் (குருமன்ஸ்) இனச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்;

Update: 2025-12-25 09:05 GMT
தேனி மாவட்ட குரும்பர் (குருமன்ஸ்) இன மக்களின் வாழ்வாதாரம், சமூக உரிமைகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்த தேனி மாவட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ​ ​தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சமூக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் குழுவினர் இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ​ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்: ​இந்தக் கூட்டத்தில் சமூகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி பின்வரும் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ​நிலையான மாவட்ட அமைப்பு: மாவட்டம், ஒன்றியம் மற்றும் பொதுக்குழு அளவில் வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்குதல். ​தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை முறையாகத் தேர்ந்தெடுத்து, அவர்களின் கீழ் இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் அறக்கட்டளைகளை நிறுவுதல். ​ST சான்றிதழ் கோரிக்கை: சமூகத்தின் நீண்ட காலக் கோரிக்கையான பழங்குடியினர் (ST) சான்றிதழ் பெறுவதற்கான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வழிகாட்ட தேனியில் தனியாக அலுவலகம் அமைத்தல் மற்றும் கல்விச் சேவைக்கான திட்டங்களைத் தீட்டுதல். ​சமுதாயத்தின் பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டுவது குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ​பாரம்பரியத் தொழிலான கம்பளி நெசவு ஆலை அமைப்பதன் மூலம் சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல். ​மாணவர் ஊக்கத்தொகை: ஆண்டுதோறும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை புரியும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தல் முடிவு எடுக்கப்பட்டது

Similar News