மணவாசி சுங்கச்சாவடியில் தனியார் டெக்ஸ்டைல் பேருந்தின் இன்ஜினில் இருந்து வெளிவந்த கரும்புகை
தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு;
கரூரில் தனியார் கொசுவலை டெக்ஸ்டைல் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருவதற்காக டெக்ஸ்டைல் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை இரவு நேரம் வேலை செய்த ஊழியர்களை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக கரூரிலிருந்து குளித்தலை நோக்கி பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி சுங்கச்சாவடியில் வந்தபோது திடீரென இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களை உடனடியாக அனைவரையும் இறங்க கூறியுள்ளார். இதனை அடுத்து அனைவரும் சுதாரித்துக் கொண்டு ஊழியர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கினர். பேருந்து ஓட்டுநர் உடனடியாக மணவாசி சுங்கச்சாவடியில் உள்ள தீயணைப்பு கருவினை கொண்டு தீயை அணைத்துள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து மணவாசி சுங்கச்சாவடியில் வந்து நிற்கும்போது வெளியான கரும்புகை மற்றும் தீயணைப்பு கருவி மூலம் ஓட்டுநர் கரும்புகையை அணைக்கும் காட்சி குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.