மணப்பாறை அருகே தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பை போராடிப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர். பாம்பை பார்க்க திரண்ட மக்கள்.
மணப்பாறை அருகே தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பை போராடிப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர். பாம்பை பார்க்க திரண்ட மக்கள்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காவல்காரன்பட்டியில் சாலையோரம் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலியில் இருந்த முட்புதர்களை தீயிட்டு கொளுத்துவதற்காக முட்களை அள்ளிய போது புதருக்கடியில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்ததைக் கண்டனர். பின்னர் இதுகுறித்து மணப்பாறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை பிடிக்க முயன்றபோது பிடிக்கு சிக்காமல் பாம்பு ஓட முயன்றது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சமயோசிதமாக செயல்பட்டு பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை சாக்கு பையில் கட்டி வனத்துறை ஊழியரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை பொயாகைமலை வனப்பகுதியில் விடுவித்தனர். தோட்டத்தில் மலைப்பாம்பு படுத்திருப்பது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பாம்பை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.