லாலாபேட்டையில் விவசாய சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு நினை அஞ்சலி
இராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை சாவடி அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தோழர் வி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது மூத்த தோழர் வி.தாட்சாயிணி கொடியேற்றினார் மாவட்ட செயலாளர் தோழர் எல்.சி.மணி பேசும் போது;
லாலாபேட்டையில் விவசாய சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு நினை அஞ்சலி இராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை சாவடி அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தோழர் வி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது மூத்த தோழர் வி.தாட்சாயிணி கொடியேற்றினார் மாவட்ட செயலாளர் தோழர் எல்.சி.மணி பேசும் போது கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 டிசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவமாகும் இதில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்ளிட்டு பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் 44 பேர் பதைக்க பதைக்க குடிசைக்குள் வைத்து தீயிட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறினார். இதில் தோழர்கள் லட்சுமணன், மோகன், கோவிந்தராஜ், ஜி.நீலாவதி, ஜெயராமன் பங்கேற்றனர். இறுதியில் வி.செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.