மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பரமத்தி வேலூர், டிச.25: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனராசு தலைமை வகித்தார்.பரமத்தி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் லலித்குமார் வரவேற்றார். நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா ,பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி ,பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு ,மாவட்ட கழக துணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 20 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய பாஜக அரசு காங்கிரஸ் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம் என்ற பெயரை மாற்றி தற்பொழுது ஜி ராம் ஜி என பெயரிட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு .நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 100 நாளுக்கு பதிலாக 125 நாள் வேலை வாய்ப்பு தருவதாக கூறியுள்ளது. அதேபோல் 100 நாள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளவர்களுக்கு மிக குறைவான வேலை வாய்ப்பு அளித்துள்ளது . நிதியையும் குறைத்துள்ளது.இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாள் வேலை கிடைக்காது. எதனால் பொதுமக்கள் ஏழை எளிய பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பெயரை மாற்றி பழைய பேரியே அந்தத் திட்டத்திற்கு வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வக்கீல் கிரி சங்கர்,பரமத்தி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ் ,மாவட்ட பிரதிநிதிகள் குன்னமலை குணசேகரன் ,மணிவண்ணன், பிரகாஷ், மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ,ஊராட்சி துணைத் தலைவர்கள், பேரூராட்சி வார்டு கழக செயலாளர்கள் ,வார்டு கவுன்சிலர்கள்,திமுக கழகத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய ,கிளைக் கழக, பேரூர் கழக பொறுப்பாளர்கள் ,பல்வேறு அணி பொறுப்பாளர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர் மலை ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கபிலர்மலை மத்திய ஒன்றிய கழக செயலாளர் வக்கீல் சரவணகுமார் தலைமை வகித்தார். கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சாமிநாதன் வரவேற்றார் , கபிலர்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தளபதி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜன் ,பரமத்தி வேலூர் தொகுதி ஐடி விங் பொறுப்பாளர் சுரேஷ்குமார், கபிலர்மலை அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தங்கமணி, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் ( திராவிடர் கழகம்) வீர முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, ஜிஜேந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ,மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.